TamilsGuide

படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம் - நேட்டோ நாடுகள் அதிர்ச்சி

ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.

ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.

இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Leave a comment

Comment