TamilsGuide

அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்

சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையை குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தீவுசுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்

“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவருக்கு கருணை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

Leave a comment

Comment