TamilsGuide

பாடசாலை அதிபர்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல்

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) வழங்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியின் அனைத்து நிலைகளிலும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) அவசியமில்லை என்பதால், ஒவ்வொரு வகுப்பறைக்கும் அவற்றை வழங்கப் போவதில்லை.

குழந்தைகளுக்குப் பொருத்தமான வயதிலேயே தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் போர்டுகளை வாங்குவதற்காக பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என்று தயவுசெய்து அதிபர்களிடம் கூறுங்கள். தேவையற்ற முறையில் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும். இது அடிமையாகும் நிலைக்குக்கூட வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தேவை மற்றும் வயதுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு திட்டமிட்ட முறையிலேயே ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 

Leave a comment

Comment