OpenAI may burn 278 Bn Dollars by 2030: OpenAI நிறுவனம் 2030-க்குள் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என Financial Times வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின் படி, 2026 முதல் 2030 வரை OpenAI-யின் negative free cash flow (செலவுகள் வருமானத்தை விட அதிகம்) 278 பில்லியன் டொலர் வரை செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது ஜூலை மாதம் நடந்த தனியார் நிறுவனக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல். அப்போது, OpenAI மிகப்பெரிய கணினி சக்தி (computing power) ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
OpenAI-யின் வருமானம் 2026-இல் 36 பில்லியன் டொலரில் இருந்து 2030-இல் 350 பில்லியன் டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கணினி சக்தி மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளில் மிகப்பெரிய செலவுகள் காரணமாக, அந்த வருமானம் போதாது என FT தெரிவித்துள்ளது.
மேலும், Bloomberg தகவலின்படி, OpenAI புதிய முதலீட்டாளர்களுடன் 1.2 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டில் நிதி திரட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. IPO (Initial Public Offering) இன்னும் திட்டமிடப்பட்டுவருவதால், இந்த ஆண்டு நடைபெறாது என CEO சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.
இந்த கூடுதல் நிதி, IPO-வை தள்ளிப்போடுவதற்கும், mergers & acquisitions (இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்) நடவடிக்கைகளுக்கும் உதவக்கூடும்.
OpenAI-யின் இந்த மிகப்பெரிய செலவுகள், AI துறையில் உலகளாவிய போட்டியை அதிகரிக்கும் நிலையில், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.


