TamilsGuide

ஜெயிலர் 2 படத்தை வாங்கிய நிறுவனம்.. ரஜினி படைத்த சாதனை

Jailer 2 Kerala, Karnataka, north India rights sold out: ஜெயிலர் 2 திரைப்படத்தின் கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவின் திரையரங்கு உரிமம் ரெக்கார்ட் பிரேக்கிங் விலைக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து ஜெயிலர் 2 எப்போது என்கிற கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து கேட்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜெயிலர் 2-வின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சுராஜ், சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து இதுவரை ஒரே ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தற்போது படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நேற்று சுராஜின் வீடியோ வெளிவந்தது; இதை தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வீடியோவும் வெளிவரவுள்ளது. மேலும், இப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் படம் என்றாலே அப்படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடக்கும். அந்த வகையில், தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தின் கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவின் திரையரங்கு உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியா திரையரங்கு உரிமையை கோகுலகம் பிலிம்ஸ் ரூ. 60 கோடிக்கு வாங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய தொகை ஆகும். மேலும், இந்த சாதனை ரஜினி படத்திற்கு மட்டுமே சாத்தியம் என திரை வட்டாரத்தில் கூறி வருகின்றனர். 
 

Leave a comment

Comment