TamilsGuide

ஈரானில் அமெரிக்க தாக்குதல்கள் - போர்க்குற்ற ஆதாரங்கள்- ஐ.நா 

ஈரானில் அமெரிக்கா நடத்திய இருவேறு வான்வழித் தாக்குதல்களில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதுவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீன நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

மினாப் நகரிலுள்ள பாடசாலை மீதான தாக்குதலில் 168 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாமர்ட் நகரில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஈரான் அரசுப் படைகள் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்றும் நிபுணர் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் மனித உரிமை மீறல்களை நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment