TamilsGuide

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூபா 900 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால், பணத் தூயதாக்கலுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சொத்துக்கள் பின்வருமாறு:

    ஹுணுபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள 07 பேர்ச்சஸ் காணியும் இரண்டு மாடி வீடும் – மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் ரூபா 400 இலட்சம்.
    ஹுணுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சஸ் காணியும் இரண்டு வீடுகளும் – மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் ரூபா 300 இலட்சம்.
    ஹுணுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 05 பேர்ச்சஸ் காணியும் கட்டிடமும் – மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் ரூபா 50 இலட்சம்.
    காந்தி மாவத்தை, ஹுணுபிட்டிய முகவரியில் அமைந்துள்ள 03 பேர்ச்சஸ் காணியும் கட்டிடமும் – மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் ரூபா 70 இலட்சம்.
    ஸ்பேசியா (Spacia) வகை கார் – மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் ரூபா 80 இலட்சம்.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூபா 900 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, பணத் தூயதாக்கலுக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் 2026.09.17 முதல் 14 நாட்கள் காலத்திற்கு முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment