TamilsGuide

என்னை அச்சுறுத்த ரஷ்யா எனது விமானத்தை தாக்க முயன்றது.. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி 

தன்னையும் மற்ற வெளிநாட்டு தலைவர்களையும் அச்சுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் நடந்தன என்றும், கடந்த சில வாரங்களில் ரஷ்யா தனது விமானத்தை இரண்டு முறை குறிவைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

செவ்வாயன்று சி.பி.எஸ். நியூஸிடம் பேசிய ஜெலன்ஸ்கி, முதல் சம்பவம் நடந்தபோது தனது விமானம் மால்டோவாவில் இருந்ததாக கூறினார்.

அவர் அந்த நாடு வழியாக திரும்பி பயணித்தபோதும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறினார். 

"மால்டோவாவில் எனது விமானம் இருந்தது, அதனால்தான் அவர்கள் மால்டோவாவை தாக்கினார்கள். நாங்கள் மீண்டும் சிசினாவ் வழியாக தாயகம் திரும்பியபோதும், அவர்கள் அதையே செய்தார்கள்," என்று அவர் கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு உக்ரைனுக்குத் திரும்பும் பயணத்தின்போது, ​​ஒன்று அல்லது இரண்டு ட்ரோன்கள் மால்டோவாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

அதிபர் தூதுக்குழுவினருடன் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். அந்த நேரத்தில், ட்ரோன் செயல்பாடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.
 

Leave a comment

Comment