TamilsGuide

சிறுவர்களை வைத்து போதை வியாபாரம் - இலவச Wifi மூலம் வசமாக சிக்கிய இளைஞன்

வடமேற்கு லண்டனில் ஜோயல் லூயிஸ் என்ற 34 வயது நபர் 'பாபி டிரக் லைன்' என்ற போதைப்பொருள் நெட்வொர்க்கின் கீழ் போதொப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

வடக்கு கில்பர்ன் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின் பேரில் சில சிறுவர்களை பிடித்து அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த்தில் லூயிஸ் உடைய செயல்பாடுகள் குறித்து  தெரியவந்துள்ளது.

இதை அறிந்த லூயிஸ் முன்னெச்சரிக்கையாக தப்பிக்க தலைமறைவாகி உள்ளார்.தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் லொகேஷனை ஹைட் செய்யும் VPN நெட்வொர்க்கை அவர் பயனப்டுத்தியுள்ளளார்.

ஆனால் அவர்களின் சாதனங்களில் ஒன்று அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.

அதை வைத்து பொலிசார் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் பின் அதிகாரிகள் கைது வாரண்ட் உடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர் கைதில் இருந்து தப்பிக்க அலமாரிக்குள் ஒளிந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால் பொலிசார் அவர் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
 

Leave a comment

Comment