டெல்லி விமான நிலையம். #அண்ணா வந்ததும் அவரை மடக்கி பேட்டி கானும் முடிவோடு ஒரு நிருபர் காத்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமையையும் சோதித்து, அவரை 'திணறடிக்க வேண்டும்' என்ற நினைப்பு வேறு அந்த நிருபருக்கு..
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.
"சரி. கேள்விகளைக் கேளுங்கள்" என்று அண்ணா சொன்னவுடன்..
அந்த நிருபர் கேட்டார்..
“டூ யு நோ யுனொ ?
சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று அண்ணாவிடமிருந்து இப்படி பதில் வந்தது....
"ஐ நோ யுனொ...
யு நோ யுனொ?
ஐ நோ யு நோ யுனொ..
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ"
-என்ற அண்ணாவின் இந்த பதிலை படித்த நமக்கே தலை சுத்துதூனா...
அந்த நிருபரோட நெலமைய யோசிச்சீங்களா? அந்தாளுக்கு மயக்கம் வராத குறை. தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.
"எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள்" என்றாராம்.
அண்ணா நிறுத்தி நிதானமாக மீண்டும் சொன்னார்...
"I know UNO (United Nations Organisation)
You know UNO..
I know you know UNO.
But I know UNO better than you know UNO."


TamilsGuide
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ
