TamilsGuide

எம்.ஜி.ஆர் ஒரு மாபெரும் மக்கள் சக்தி - அண்ணா

ஒரு தேர்தல் பிரசாரச் சூழலில் எம்.ஜி.ஆர். தனது திரைப்பட சம்பளத்தை தேர்தல் நிதியாக வழங்க முன்வந்திருக்கிறார். அப்போது அண்ணா  என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
“தம்பி ராமச்சந்திரன் ஒரு படத்திற்கான தனது சம்பளத்தைத் தேர்தல் நிதியாகத் தருவதாகக் கூறியிருக்கிறார். எனக்கு அது வேண்டாம். அவர் ஒரு படத்திற்குக் கொடுக்கும் பணத்தைவிட, ஒரு மாதம் தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரசாரம் செய்தால் கிடைக்கும் பயன் அதிகம்.” அதாவது “தம்பி, நீ தரும் தொகையைவிட உன் முகம் எனக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுகளை அள்ளித்தரும். தேர்தல் பிரசாரத்துக்கு வா!” என்ற அழைப்புதான் அது. 
ஆம், "எம்.ஜி.ஆர் ஒரு மாபெரும் மக்கள் சக்தி” என்பதை மிக முன்னதாகவே புரிந்துகொண்டிருந்தார் அண்ணா.
ஓம் பராசக்தி!
- முனைவர் ரத்னமாலா புரூஸ் 
 

Leave a comment

Comment