அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
OpenAI மற்றும் Anthropic ஆகிய முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் AI ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய ஜேக்கப் கொக்சன் (Jacob Coxon) இது தொடபிள் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், "இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று கூட பொறுப்புடன் செயல்படவில்லை.
அவசரமாக நடைமுறை
அவர்கள் தங்களைத்தானே சுய-மேம்படுத்திக் கொள்ளும் அதிநவீன அsuper-intelligent AI அமைப்புகளை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக நமது உயிர்களையே பணையம் வைத்து விளையாடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, Google DeepMind இன் நிறுவுனரான சர் டெமிஸ் ஹசாபிஸ் (Sir Demis Hassabis), AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் சர்வதேச அளவிலான ஒழுங்குமுறைகள் (International Regulation) அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


