TamilsGuide

மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள சூரி நடிப்பில் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று மண்டாடி. சூரி என்கிற ஒரு நடிகருக்காகவே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படகு போட்டியை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. ஒவ்வொரு நாளும் இப்படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில், 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், 5 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள மண்டாடி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி, நேற்று விநாயகர் சதுர்த்தி வரை விடுமுறை நாட்களை பயன்படுத்தி இப்படம் மிகப்பெரிய வசூலை செய்துள்ளது. இன்னும் ஒரே வாரத்திற்குள் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment