TamilsGuide

உயிர் பயத்தை காட்டிய புயல் காற்று.. 3 முறை முயன்றும் கடைசியில்.. அலறியடித்த பயணிகள்

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் விமானம் துனிசியாவின் கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முன்றபோது அங்கு வீசிய புயல் காற்றில் சிக்கியது.

இதனால் 3 முறை முயன்றபோதும் விமானதால் தரையிறங்க முடியவில்லை. மேலும் விமானமானது கடுமையாக குலுங்கியுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் இருக்கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பீதியில் கூச்சலிட்ட காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பயணிகளில் ஒருவரான மரினா மேஸ்காயா கூறுகையில், மூன்றாவது முயற்சியின் போது விமானம் திடீரென உயரத்தில் இருந்து கீழே விழுவது போல் உணர்ந்ததாகவும், தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய பயத்தை எதிர்கொண்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நிலைமையை அவதானித்த விமானிகள் 60 மைல் தெற்கே உள்ள என்பிதா ஹம்மாமத் விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பிச் சென்று அங்கு பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

Leave a comment

Comment