1980 கள் வரை பல திரை பிரபலங்கள் இங்க தான் வசித்தார்கள்
MGR அலுவலகம் இங்க தான் ஆற்காடு முதலி தெரு ..
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சாவித்திரி கணேஷ் தி. நகர் பிரபலங்கள். கவியரசர் கண்ணதாசன் அன்று ஹென்ஸ்மான் தெரு என அழைக்கப்பட்ட இன்றைய கண்ணதாசன் சாலையில்
இயக்குனர் ஸ்ரீதர் கடைசி வரை தி.நகர் தான்
பழைய நடிகர் தண்டபாணி தேசிகர் பாண்டி பஜார் பின்னாடி தினதயாளன் தெருவில் 6 கிரவுண்டில் 2 வீடுகள் வைத்திருந்தார் ,நடிகை கண்ணாம்பா தண்டபாணி தெரு .
பானுமதி - வைத்தியராமன் தெரு எதிர் வீடு முக்தா அவர்களுடையது
வாணி ஸ்ரீ, காஞ்சனா எங்க ஏரியாதாங்க
மனோரமா - சிவாஜி வீட்டுக்கு எதிர் தெருவில்
டணால் தங்கவேல் - ராஜாபாதர் தெரு
சிவகுமார் சூர்யா கார்த்தி - பாண்டிபஜார் அடுத்த கிருஷ்ண தெரு வாசி, இதே தெருவில் தா சில காலம் பாக்யராஜ் இருந்தார்.. ராமன் தெருவில் கே. ஆர். விஜயா, நாயர் தெருவில் சின்னப்பா தேவர்
பாரதிராஜா, சங்கர், மெளனராகத்தில் ரேவதி அப்பா சங்கர்,கே. சுந்தர்ராஜன் டி. ராஜேந்தர், சிம்பு இங்க தான், இளையராஜா முருகேசன் தெரு
மஹாகவி பாரதியின் மகள் வீடு இங்க இருக்கு..
ராஜா தெரு அகஸ்தியர் கோவில் கட்டியது தேவி தியேட்டர் ஓனர்கள்..
பல படங்களில் வந்துள்ளது அந்த கோவில்..
ஜெ, சசிகலா, நயன் தாராவுக்கு பிடித்த கோவில் அது...
விஜய்காந்த் இங்க தான் ராஜாபாதர் தெருவிலிருந்தார் பல காலம்
தெலுகு நடிகர்கள் என்.டி.ஆர் வெங்கடேஷ், கிருஷ்ணா, சிரஞ்சிவியின் மாமனார் குடும்பம்,
எத்தனை படப்பிடிப்புகள் நடக்கும் தினமும்..
அந்த ஏழு நாட்கள் கடை வீதி
மெளன கீதங்கள் சரிதா வீடு
சிகப்பு ரோஜாக்கள் பங்களா
இது ஒரு பொன் மாலை பொழுது.. வெங்கட்நாராயணா ரோடு
நடேசன் பார்க் பல படங்களில் வசித்தார்கள்
AvM கார்த்திக் ராதா நடித்த நல்லதம்பி க்ளைமாக்ஸ் பனகல்பார்க் ஏரியாவில் எடுக்கப்பட்டது.
தெலுகு படங்கள் பல இங்கதா 1980 களில் எடுத்தார்கள்
பிருந்தாவன் லாட்ஜ் தெலுகு நடிகர்களின் கோட்டை
சிரஞ்சீவி இங்க தாn இருப்பார் ஆரம்பத்தில் பல நாட்கள் பார்த்ததுண்டு
இசைஞானி இங்கதா இருக்கிறார்
ஒரு காலத்துக்கு பிறகு எல்லாம் நின்று விட்டது..
ரொம்ப வருஷ்த்துக்கப்புறம் இப்ப சிவகார்த்திகேயன் பட படப்பிடிப்பு பாண்டி பஜாரில் நடக்குது
தி.நகர் ஒரு காலத்தில் சினிமாக்காரர்கள் வசித்த இடம் பனகல் பார்க் காய்கனி மார்க்கெட்டில் தான் பலரும் வந்து வாங்குவாங்க இதுதவிர இன்னு ஏராளமானோர்கள் இங்கேதான் இருந்தார்கள் . இதில் விடுபட்டவர்லின் பெயர்களை அன்பர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம் .
இன்று இது ஒரு வணிக காடு.. Sukumar Shan


TamilsGuide
சென்னை தி நகரும் தமிழ் சினிமாவும்
