TamilsGuide

ஜேர்மன் உள்ளாட்சித் தேர்தல்கள் - மீண்டும் சாதித்த ஆளுங்கட்சி

Merz's CDU comes out on top in Lower Saxony polls: ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரிக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று Lower Saxony மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. 

Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி அமோக வெற்றி பெற்ற விடயம் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், Lower Saxony மாகாணத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த, ஆளும் Christian Democratic Union (CDU) கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. 

CDU கட்சி 27.2 சதவிகித வாக்குகளுடன் முதலிடம் பிடித்த நிலையில், The Social Democrats (SPD) கட்சி 24.6 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய AfD கட்சி 15.9 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடிக்கமுடிந்துள்ளது. 
 

Leave a comment

Comment