டீசல் விற்பனையால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். தெற்காசியஉடைகளைத் தேர்ந்தெடு
இன்று(14.09.2026) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றினைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 60 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சுத்திகரிப்பு மூலம் கிடைத்த இலாபத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தைச் சமாளிக்க முடியும்.
இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படாது என்றார்.


