TamilsGuide

கமுகு தென்னை வாழை போன்ற பயிர்கள் அழிவடையும் நிலையில்

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு,  தருமபுரம்,  நாதன்குடியிருப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் கமுகு,  தென்னை,  வாழை போன்ற பயிர்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான எல்நினோ காலநிலை காரணமாக கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதாகவும் இதன் காரணமாக தோட்டச் செய்கைக்கு போதிய அளவு நீர் கிடைக்க பொறாமை காரணத்தினால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வறட்சியின் காரணமாக வாழச் செய்கை கைவிடப்பட்டுள்ளதாகவும், தென்னைகளும் கமுகு போன்ற மரங்களும் அழிவடைந்த நிலையில் காணப்படுவதாகவு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள என்றுமில்லாத வறட்சியின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment