TamilsGuide

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தமது இராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகியன இணைந்து உடனடி வலுவான மற்றும் புத்திசாலித்தனமான பதிலடியைக் கொடுக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி "தமது நாட்டின் இரண்டு படைகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமை எதிரிகளின் சதித்திட்டங்களுக்கு எதிராக நாட்டைக் காக்கும் இரும்புக் கேடயமாகச் செயல்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி எதிரி நாடுகள் ஈரானின் இராணுவப் பலத்தை மிகவும் குறைவாகக் கணித்துத் தவறிழைத்து விட்டதை தற்போது உணர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஈரானிய இராணுவமும் ஐசுபுஊ அமைப்பும் அமெரிக்க எதிர்ப்புக்கான இரு முக்கியப் பெரும் படைகளாகத் திகழ்வதாகவும் அண்மைய போர்களில் பயங்கரவாதக் குழுக்களுக்கு மிகக் கடுமையான அடிகளைக் கொடுத்துள்ளதாகவும் வஹீதி தெரிவித்தார்.

அத்துடன், ஈரானின் உண்மையான இராணுவ வலிமை போர்க்களத்தில் வெளிப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a comment

Comment