TamilsGuide

ரஷ்யாவின் டீசல் கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் - ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் கோரிக்கை

பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், ரஷ்யாவின் டீசல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளுக்கு மேல் போர் நடக்கிறது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து, சமீப காலமாக, உக்ரைன் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் முடங்கி உள்ளது.

இதனால், எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், சில நாடுகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒன்றை செய்ய வேண்டும்.

ரஷ்யாவின் டீசல் எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இலக்குகளை குறிவைத்து தாக்கலாம்.

ஆனால், டீசல் எரிபொருள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அவர் டீசலுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a comment

Comment