TamilsGuide

எல் நினோ இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும்! வெளிவந்துள்ள புதிய அறிக்கை

எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும் என ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், 2026ஆம் ஆண்டைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டும் வரலாற்றில் மிகக் கடுமையான வெப்பம் நிலவும் ஆண்டாக அமையக்கூடும்.

உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை காணப்படுவதுடன், 2027ஆம் ஆண்டிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் உள்ளது.

மேலும், எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும். அது இதுவரை பதிவானவற்றில் மிகவும் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக அமையக்கூடும்.

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் உலகின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment