New Change Coming For SIM Card Users in Sri Lanka: சிம் கார்டு விநியோகத்தில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சிம் கார்டு வாங்கும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நேரலை(Live) புகைப்படத்தை பதிவு செய்வது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டுகள் மூலம் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி ஒரு நபர் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் இருந்து 5 சிம்கள் வரை வாங்க முடியும்.
மொத்தமாக 3 நிறுவனங்களில் இருந்து 15 சிம் கார்டுகள் வரை ஒரு நபர் தேசிய அடையாள அட்டையை சிம்களை வாங்க முடியும்.
அதே நேரத்தில் தொலைபேசி எண்களை மாற்றாமல் அப்படியே மற்றொரு சேவைக்கு மாறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
2027ம் ஆண்டுக்குள் அனைத்து சிம் கார்டு பயனர்களின் அடையாளங்களை 100% உறுதிப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.


