TamilsGuide

நமது எம்ஜிஆர் அவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது என்னுடைய அவா; ஏழை எளிய தமிழ் மக்களின் அவா!

"காந்தி சுடப்பட்டார், இறந்து போனார்!
ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார், இறந்து போனார்! ஜான் எஃப். கென்னடி சுடப்பட்டார், இறந்து போனார்!
என் தம்பி எம்.ஜி.ஆர் சுடப்பட்டார்... நல்லவேளை யார் செய்த நற்பயனோ அவர் பிழைத்துக்கொண்டார்! அவரை இழந்திருந்தால் அது சாதாரண இழப்பாக இருந்திருக்காது. ஈகை குணம் கொண்ட ஒரு நல்ல மனிதரை, ஒரு நல்ல பண்பாடளரை, ஒரு நல்ல நடிகரை, இப்படி எத்தனையோ பேரை எம் ஜி ஆர் என்ற தனிமனிதர் மூலம் இழந்திருப்போம். இத்தனை நல்ல குணங்களும் ஒருங்கே பெற்ற நமது எம்ஜிஆர் அவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது என்னுடைய அவா; ஏழை எளிய தமிழ் மக்களின் அவா!"
1967-ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று நடிகர் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல்நிலை குறித்து மக்கள் பெரும் கவலையில் இருந்தபோது, பேரறிஞர் அண்ணா மக்கள் முன் உரையாற்றுகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளைக் கூறினார்.
அண்ணாவின் இந்த உருக்கமான உரை மக்களிடையே பெரும் உணர்ச்சி அலையை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் கழுத்தில் கட்டுடன் இருந்த எம்.ஜி.ஆரின் புகைப்படம் தேர்தல் சுவரொட்டியாக வெளிவந்து, 1967-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கவும் வழிவகுத்தது.
 

Leave a comment

Comment