படம் ஆரம்பித்து ஒரு பத்து நிமிடத்தில் ரஜினி வந்து பூசணிக்காயை தலையில் உடைத்ததும் திரையரங்கமே விழா கோலம் பூண்டது. விசில் சத்தம் காதை கிழித்தது.
இப்போது புரிந்திருக்கும் நான் பாட்ஷா படம் பற்றி தான் சொல்கிறேன் என்று.
யானைக்கு கவளம் கொடுக்கும் சைஸுக்கு கற்பூரம். அதை ஏற்றி த்ரிஸ்ட்டி சுற்றினார்கள் அதுவும் திரைசீலைக்கு அருகில்.
ரஜினிகாந்த் “நீ நடந்தால்” பாடல்வரும்போது மொத்த திரையரங்கமே ஆர்ப்பரித்தது.
“வெளிய சொல்லிடமாட்டியே ?” டயலாக் வரும்போது மொத்த திரையரங்கமும் நகையாடியது
தங்கைகாக கை கட்டி, காலில் விழுக போகும்போது, எல்லோரும் சென்டிமென்டில் உருகி கொண்டு இருக்க, ஒரு சிலர் மட்டும் “டேய் சொட்ட ! என் தலைவனையே வா” என்று கத்த ஆரம்பித்து விட்டனர்
இடைவேளையும் அதற்கு முன்பு 30 நிமிடமும் திரையரங்கமே ஒரு மயான அமைதி
இடைவேளைக்கு பிறகும் படம் அற்புதமாய் இருந்தது, குறிப்பாக ரகுவரன் மிரட்டி இருப்பார்
பாட்ஷா படத்தில் இருந்து “fast and furious 6” ஹாலிவுட் படத்தில் அப்படியே காட்சியை வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு படம் ஓடியது
பாட்ஷா படத்தின் வெற்றிக்கு காரணம் சுமாராக ஓடிய “ஹம்” என்ற ஹிந்தி படத்தின் கதையை திருத்தி திரைக்கதையை திருத்தி சரியாக எடுத்ததே.
இதில் வேடிக்கை என்னவென்றால் ரஜினியும் ஹிந்தி படத்தில் நடித்திருப்பார் அதுவும் தம்பியாக போலீஸ் கதாபாத்திரத்தில்
பாட்ஷா என்றுமே ரஜினியின் தங்கமகுடம்.
Prabu Shanmugam


