TamilsGuide

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்

நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் காலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக, கொழும்பு 13, செயிண்ட் பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள பிரபல பேக்கரி நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2026 ஏப்ரல் 20 அன்று குறித்த விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, 2026/04/16 என காலாவதி திகதி குறிப்பிடப்பட்டிருந்த ஸ்ட்ரோபெரி சுவையுடைய கிரீம் பன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2026 செப்டம்பர் 09 அன்று இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 05) முன் அழைக்கப்பட்டபோது, பிரதிவாதி நிறுவனம் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டது. 

அதன்படி நீதிமன்றம் குறித்த நிறுவனத்திற்கு ரூ. 200,000/- அபராதம் விதித்தது.

நுகர்வோருக்கு முக்கிய அறிவுரை:

உணவுப் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் தேதி மற்றும் காலாவதி தேதியை எப்போதும் சரிபார்க்கவும். காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் மூலம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உடனடியாக அறிவிக்கவும்.
 

Leave a comment

Comment