உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026இல் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
கனடாவின் டொரொன்டோ மாநகரில், எதிர்வரும் 2026 அக்டோபர் 15 முதல் 18 வரை, அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள “உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026” நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் பங்கேற்கவுள்ளார்.
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செம்மொழித் தமிழின் தொன்மை, வளமை மற்றும் அறிவுச் சிறப்புகளை உலக அரங்கில் உயர்த்துவதுடன், செய்யறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் காலத்தில் தமிழின் பயன்பாடு, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை இம்மாநாடு உருவாக்கும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் புதிய வழிகளை உருவாக்கும் இம்மாநாடு சிறப்பான வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
13 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டில், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் வருகை சிறப்புச் சேர்க்கவுள்ளது.
ஊடகத் தொடர்புக்கு:
அனைத்துலகத் தமிழர் பேரவை
மின்னஞ்சல்: admin@tamilfederation.org
இணையதளம்: www.globaltamilconference.org


