TamilsGuide

தலைமுடி நிறத்தை மாற்றிய ட்ரம்ப் - சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய தோற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான தலைமுடி தோற்றத்தை மாற்றி புதிய வண்ணத்தில் காட்சியளிப்பது இணையவாசிகளிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது.

அவர் காலம் காலமாகப் பராமரித்து வந்த வழக்கமான பொன்னிறம் (Blonde) நிற தலைமுடியை மாற்றி, திடீரென கருப்பு மற்றும் பழுப்பு கலந்த (Brunette) நிற முடிக்கு மாறியுள்ளார்.

செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ட்ரம்பின் இந்தப் புதிய தோற்றம் குறித்த நிழற்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.

முன்னதாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ட்ரம்ப், "நான் செயற்கை தலைமுடி (Wick) எதுவும் அணிவதில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவரது இந்த திடீர் நிற மாற்றம் மீண்டும் அவர் மீதான கவனத்தை ஈர்த்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a comment

Comment