TamilsGuide

பல நெடுஞ்சாலைகளுக்கான பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க திட்டம்

இந்த ஆண்டு முடிவதற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க செவ்வாய்க்கிழமை (08) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

குருணாகல்-தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் குருணாகல்-கலேவெல பிரிவின் பணிகள் 2026 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

கஹதுடுவ-இங்கிரிய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானமும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட கட்டுநாயக்க – சிலாபம் நெடுஞ்சாலைக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதேவேளையில் அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட நெடுஞ்சாலை கட்டமைப்பு ஒன்றை ஆய்வு செய்வதற்கான தனி முன்மொழிவு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்கிய அமைச்சர், கடவத்த – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை 2028 மே மாதத்திற்குள்ளும், பொத்துஹெர – ரம்புக்கன பகுதி 2027 ஏப்ரல் மாதத்திற்குள்ளும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment