TamilsGuide

அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இந்த உரையின் போது அவர், மக்களுக்குத் தவறான தகவல்களை அளித்து வருவதாகவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதிலும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்பிடத்தக்க வகையில், தனது உரையினபோது ராஜபக்ஷ தனது கைது குறித்தோ அல்லது தற்போது நடைபெற்று வரும் வழக்கு குறித்தோ எதையும் குறிப்பிடவில்லை.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்ஷ அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


 

Leave a comment

Comment