TamilsGuide

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கொலை வழக்கில் மனைவி கைது

கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது மனைவியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்தக் குற்றம் 2018 செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெற்றது.

குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான புலனாய்வுப் பிரிவு இது குறித்து விசாரணையை முன்னெடுத்து வந்தனர்.

இதற்கிணங்க கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், குற்றச் செயலுக்குச் சதி செய்தல் மற்றும் அதற்குத் துணைபுரிதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்த பாதிக்கப்பட்டவரின் மனைவியை, விசாரணை அதிகாரிகள் நேற்று (07) பிற்பகல் கிரிந்திவெல, நரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகத்திற்குரிய 49 வயதுடைய பெண் குறித்த பகுதியைச் சேர்ந்தவர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
 

Leave a comment

Comment