TamilsGuide

வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் நிலையம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஏழு மாவட்டங்களில் உள்ள 34,628 குடும்பங்களைச் சேர்ந்த 1,13,406 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 

Leave a comment

Comment