TamilsGuide

கனடாவில் கோர விபத்து - வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இளைஞர் பரிதாப பலி

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாநிலத்தில் உள்ள கெட்ஜ்விக் ஆற்றுக்கு அருகில் உள்ள பால்ஸ் புரூக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் தவிர்க்க முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டுள்ளதாகப் பொலிஸார் நம்புகின்றனர்.

வாகனத்தில் பயணித்த ஒரேயொரு பயணியான 26 வயதுடைய இளைஞர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செயிண்ட்-குவென்டின் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஓட்டுநருக்கு எந்தவித உடற்காயங்களும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a comment

Comment