TamilsGuide

பிரான்சில் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 வயது இளைஞர்

பிரான்சின் எசோன்  மாவட்டத்திற்கு உட்பட்ட க்ரினி பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

'க்ரினி 2' (Grigny 2) குடியிருப்புப் பகுதியிலுள்ள 'சுர்கூப்' (Square Surcouf) சதுக்கத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இடத்திற்கு அருகாமையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தது ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் மீட்பு மற்றும் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் அல்லது நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை எவ்ரி (Évry) அரச வழக்குத்தொடுனர் அலுவலகம் (Parquet) ஆரம்பித்துள்ளதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விசேட குற்றங்களுக்கு எதிரான காவல் பிரிவினரிடம் (DCOS) மேலதிக விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment