கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான செனக பல்தென்ன தெரிவித்தார்.
அதற்காக முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் வேறு சிலருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவரது பாதுகாப்பிற்காக தனி சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவின் நலம் விசாரிப்பதற்காக அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் வருகை தந்ததாகவும் பல்தென்ன மேலும் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள நாமல் கொலை செய்யப்படலாம் என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


