TamilsGuide

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதா?- நடிகை டாப்ஸி ஆதங்கம்

பிரபல நடிகையான டாப்ஸி மனதில் தோன்றும் கருத்துக்களை துணிச்சலோடு வெளிப்படுத்தி வருகிறார்.

சமீப காலமாக சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது எனக் கூறினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தப் பிரச்சினையை நடிகர்களாலும் தயாரிப்பாளர்களாலும் மட்டுமே தீர்க்க முடியாது. சமூக வலைதளங்களில் பெண்களின் படங்கள் பரப்பப்படும் விதத்தை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பினாலும் வேறு சிலர் அதே படங்களை எடுத்து அவற்றை பெரிதாக்கி விசித்திரமான கோணங்களில் பயன்படுத்தி வைரலாக்குகின்றனர்.

அதற்கென ஒரு பார்வையாளர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு எதிராக பார்வையாளர்கள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a comment

Comment