TamilsGuide

பலாலி சந்தியில் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள்,  வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர்களான  பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் , பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை செப்டெம்பர் மாதமளவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment