TamilsGuide

வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம் வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 11மணியளவில் இடம்பெற்றுள்ளது.ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment