TamilsGuide

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா இன்றாகும்.

இதனை முன்னிட்டான விசேட விழா, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது

இதற்கமைய, இன்று காலை 9.00 மணிக்கு பிட்டக்கோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தவில் இந்த ஆண்டு நிறைவு விழா நடைபெற்றதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

1946ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி கொழும்பிலுள்ள ‘பாம் கோர்ட்’ மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது கட்சியின் தலைவராக டி.எஸ். சேனாநாயகவும், செயலாளராக எச்.டபிள்யூ. அமரசூரியவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இணைப் பொருளாளர்களாக முஸ்லிம் சமூகத்தின் தலைவரான சேர் ராசிக் பரீட் மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கட்சியின் நிறமாக பச்சை நிறமும், சின்னமாகக் நிலவாழ் உயிரினங்களில் மிகப்பெரிய விலங்கான யானையும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

1946இல் கட்சி தொடங்கப்பட்டது முதல் இதுவரை டி.எஸ். சேனாநாயக, டட்லி சேனாநாயக, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச போன்ற பல ஆளுமைமிக்க தலைவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர்.

ரணசிங்க பிரேமதாசவின் மறைவுக்குப் பிறகு, ரணில் விக்கிரமசிங்க இன்றுவரை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகின்றார்.
 

Leave a comment

Comment