TamilsGuide

ரஷ்யா சென்ற ட்ரம்பின் மருமகன் - தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உக்ரைன் தாக்குதல்

அமெரிக்க அமைதிக் குழுவின் வருகையை முன்னிட்டு, ரஷ்யாவும் உக்ரைனும் பரஸ்பரம் நடத்தும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்ட அமைதிக் குழுவினர் சென்றுள்ளனர்.

இதனை முன்னிட்டு, உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, ரஷ்யா மீதான தாக்குதல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்புகளும், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான சேதங்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
 

Leave a comment

Comment