வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆயலத்தின் வருடாந்த மகோற்சப பெருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க ஆயிரக்கணக்காணவர்கள் ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.
செப்டம்பர் 9 ஆம் திகதி தேர்த்திருவிழா
அதுமட்டுமல்லாது புலமபெயர் தமிழகளும் நல்லூர் கந்தனை காண நாட்டுக்கு வௌகை தந்தவண்ணம் உள்ளனர். இன்னிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை(5) காலை சந்தான கோபாலர் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இன்றையதினம் ஆலயத்தில் ஆயிரக்கணகான அடியவர்கள் சந்தான கோபாலர் உற்சவத்தை கண்டு களித்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா (மகோற்சவம்) செப்டம்பர் 2, 2026 அன்று கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக ஆரம்பமானது தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் , 10 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.


