TamilsGuide

மட்டக்களப்பில் அழையா விருந்தாளியால் பரபரப்பு - மடக்கிப்பிடித்த ஊரவர்கள்

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 8 அடி நீளமான முதலை ஒன்றை பொதுமக்கள் நேற்று (04) இரவு மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த முதலை, கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் நுழைந்தஅப்பகுதி மக்கள் வளர்த்து வந்த கோழிகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு தோட்டக் காணிக்குள் முதலை ஊடுருவுவதை அவதானித்த காணி உரிமையாளர், அயலவர்களின் உதவியுடன் சுருக்கு வைத்து முதலையைப் பிடித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டு , முதலையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a comment

Comment