TamilsGuide

மிஹிந்தலையில் அதிர்ச்சி! குளக்கரையில் கைவிடப்பட்ட பொதியில் T-56 துப்பாக்கி மீட்பு

மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டா மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதாக நேற்று (4) கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட மிஹிந்தலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே இந்த துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அந்த இடத்தில் கொண்டுவந்து போட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Comment