TamilsGuide

அழிவின் விளிம்பில் இங்கிலாந்து - ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், இங்கிலாந்தின் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசு கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணம், பசுமை ஆற்றல் கொள்கைகள் மற்றும் உலகெங்கிலும் இருந்து எல்லையைக் கடந்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் ஆகியவை அந்த நாட்டைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தாமல், இங்கிலாந்து தன் பொருளாதாரத்தை அழித்துக் கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
 

Leave a comment

Comment