TamilsGuide

ஆழ்கடலில் அதிரடி ஆக்ஷன் - நடிகர் சூரியின் மண்டாடி டிரெய்லர் வெளியானது

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "மண்டாடி". இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்துடன் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகு போட்டி அடிப்படையில் மண்டாடி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தில் இருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன.

குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மண்டாடி திரைப்படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும், படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், மண்டாடி திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் படகுப் போட்டி, ஆக்ஷன் என மண்டாடி உலகிற்கு ரசிகர்களை அழைத்து செல்லும் வகையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

இந்தப் படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 

Leave a comment

Comment