TamilsGuide

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள போராட்டம் திரைப்படத்தின் டிரைலர் 

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

'போராட்டம்'

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'போராட்டம்'. இப்படத்தை ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும், இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களிலேயே நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ எடுக்கப்பட்டுள்ளது.

டிரைலர்

பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க: 
 

Leave a comment

Comment