???? புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாதித்த சபின்!
???? யாழ். மண்ணின் கிராமப்புறப் பாடசாலைக்கு கிடைத்த பெருமைமிகு சாதனை! ❤️????
இன்று (02.09.2026) மாலை வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவரான சு. சபின், தமிழ்மொழி மூலம் 188 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ????✨
ஒரு கிராமப்புறப் பாடசாலையில் கல்வி கற்று, தனது திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் அகில இலங்கை மட்டத்தில் உயரிய இடத்தைப் பெற்றுள்ள மாணவன் சபினின் இந்த சாதனை, யாழ். மண்ணிற்கும் அவரது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளது. ❤️????
???? சாதனை மாணவன் சு. சபினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
???? மேலும் பல உயரங்களைத் தொட்டு, எதிர்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துகள்!


TamilsGuide
யாழ். மண்ணின் கிராமப்புறப் பாடசாலைக்கு கிடைத்த பெருமைமிகு சாதனை!
