TamilsGuide

என் பெயரை வையுங்கள்..மிகவும் சூடாக இருக்கும் - ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் டிரம்ப் பதிவு

உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,

ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் காரணமாக அது முன்னர் இருந்ததைவிட “மிகவும் சூடாக” இருக்கும் என பதிவிட்டுள்ளார்

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதற்கு புதிய பெயரைச் சூட்டுவது தொடர்பான ட்ரம்பின் கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதேசமயம் , ஹோர்முஸ் நீரிணையின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Leave a comment

Comment