• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேதவத்தையில் பெருமளவிலான போதைப்பொருடன் ஒருவர் கைது

இலங்கை

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருமளவு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (02) நண்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply