TamilsGuide

லேக் ஒன்டாரியோ புதிய பெயர் பலகையை திறக்க 25,000 டொலர் செலவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவில் ஓன்டாரியோ மாகாணப் பிரதமர் டக் ஃபோர்டு திறந்தவைத்த புதிய "லேக் ஒன்டாரியோ, இப்போதும் எப்போதும்" பெயர் பலகைக்கு 25,000 டொலர்கள் செலவிடப்பட்டதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கனடா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், அமெரிக்க அரசு ஆவணங்கள் மற்றும் வரைபடங்களில் 'லேக் ஒன்டாரியோ' ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றுமாறு டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வினோனா பகுதியில் இந்த பிரம்மாண்ட இருமொழிப் பெயர் பலகையை நிறுவிய டக் ஃபோர்டு, "ஜனாதிபதி டிரம்போ அல்லது வேறு யாரேனும் மறந்துவிட்டால் நினைவூட்டவே இதை வைத்துள்ளோம்; இது இப்போதும் எப்போதும் லேக் ஒன்டாரியோதான்.

நாங்கள் யாரிடமும் பணிந்து போகமாட்டோம்" என்று தெரிவித்தார். கனடியப் பிரதமர் மார்க் கார்னி இந்த பெயர் மாற்றத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

'ஒன்டாரியோ' என்ற பெயர் 400 ஆண்டுகளுக்கு மேலான பழமையான "வெண்டாட்" பழங்குடியின மொழியிலிருந்து உருவானது எனவும், அதற்கு "பெரிய மற்றும் அழகிய ஏரி" என்று பொருள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 

Leave a comment

Comment