• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேவர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்  நல்லநேரம்

சினிமா

தேவர் பிலிம்ஸ்" நல்லநேரம்" மக்கள் திலகம் எம்ஜிஆர்,  புன்னகை அரசி கே.ஆர்விஜயா நடிப்பில் 10-03-72ல் வெளிவந்த மாபெரும் வெற்றி காவியம். மொத்தம் 9 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இலங்கையையும் சேர்த்தால் மொத்தம் 11 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி மகத்தான வெற்றி பெற்றது.

சென்னையில் திரையிட்ட 4 அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி வசூலிலும் 12 லட்சத்துக்கு மேல் பெற்று சாதனை செய்த படம். சேலத்தில் தொடர் ஓட்டத்தில் வெள்ளிவிழா கண்ட படம். 

சேலம் ஓரியண்டலில் 126 நாட்களும் தொடர்ந்து ராமில் 31 நாட்களும் சித்தேஸ்வராவில் 35 நாட்களுடன் மொத்தம் 192 நாட்கள் ஓடி வெள்ளிவிழாவை நிறைவு செய்தது.

1972 ன் பிளாக்பஸ்டர் படம் என்றால் நல்லநேரம் மட்டும்தான். சுமார் 60 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி அசுரவெற்றியை பதிவு செய்தது.

B &C சென்டர்களில் நின்றபாடில்லை ஒரே தொடரோட்டம்தான்.அய்யனின் 2 படங்களை வெள்ளிவிழா ஓட்டிய போதும் பட்டிக்காடு படம் 13 தியேட்டரில்தான் 50 நாட்கள் ஓட்டப்பட்டது. வ.மாளிகை சுமார் 30 க்கும் குறைவான அரங்குகளில்தான் 50 நாட்கள ஓட்டப்பட்டது.

நல்லநேரம் படத்தின் பெரும் வெற்றிக்கு மூல முக்கிய காரணம் தேன் சொட்டும்  பாடல்கள் மற்றும் மக்கள் திலகத்தின்  அதகல நடிப்பாற்றல் என்றே சொல்ல வேண்டும். யானையுடன் நடித்த காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்ததுடன்  ஆர்.கே.சண்முகத்தின்  தெறி வசனங்கள் விறுவிறுப்பாகவும் அழகு ரசனையில் சிறந்த முறையில் கையாளப்பட்டது. 'டிக் டிக் டிக் இது மனசுக்கு தாளம் ', மற்றும் 'நீ தொட்டால்'  எங்கும் பொன்னாகுமே" என்ற கவியரசர் பாடல்கள் மக்கள் மனதை வருடியது. 'ஆகட்டுண்டா தம்பி ராஜா நட ராஜா' பாடல் சிறுவர்கள் மத்தியில் குதூகலத்தை வரவழைத்தது. 'ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும் ' பாடல் நல்ல கருத்துக்களை சொல்லும் பாடலாக அமைந்தது. சாகஸ காட்சி மனதில் பயத்தை வரவழைத்தாலும் தலைவர் நெருப்புடன் தண்ணீரில் குதித்து வரும் போது  என்னமோ நாமே உச்சிலிருந்து குதிப்பது போல்  உணர்வால் எழும் கரகோஷம் அடங்க நீண்ட நேரமானது.

"நல்ல நேரம்" மதுரை மாவட்டத்தில் மதுரையை தவிர 8 ஊர்களில் 50 நாட்கள் ஓடியது. மதுரையில் அலங்கார் மற்றும் மூவிலேண்டில் வெளியாகி அலங்காரில் 112 நாட்களும் மூவியில் 5 வாரமும் ஓடி 4 லட்சம் வசூலை கடந்தது.  சென்னை சித்ராவில் தொடர்ந்து 116 காட்சிகளும் மகாராணியில் தொடர்ந்து 121 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை செய்தது. 

நெல்லையில் 84 நாட்களில் ரூ161000 வசூலாக பெற்று "வசந்த மாளிகை"யை வெற்றி பெற்றது. நெல்லையில் "வசந்த மாளிகை" ஓடியதே 69 நாட்கள்தான். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. இன்னும் பல்வேறு சாதனைகளை இன்று வரை செய்து கொண்டிருக்கும் "நல்ல நேரம்" தலைவர் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நேரம்தான் என்று இதைவிட தெளிவாக சொல்ல முடியாது.

நன்றி நடிகப் பேரரசர்... 

Leave a Reply